திருப்பதியில் நடைபாதையில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 6 வயது சிறுமி, தனது பெற்றோருடன், அலிபிரி நடைபாதையில் நடந்து சென்றபோது, சிறுத்தை தாக்கி பரிதாபமாக கடித்து கொன்றது. இதையடுத்து, கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி இரண்டு நடைபாதைகளில் உள்ள வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டது. இதுவரை இந்த கூண்டுகளில் நான்கு சிறுத்தைகள் பிடிபட்டன. இந்த சிறுத்தைகள் திருப்பதி வன உயிரின பூங்காவில் பராமரித்து வரப்படுகிறது.
இந்நிலையில், ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளதால், பிடிபட்ட மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
திருப்பதி மலையை ஒட்டிய சேஷாசலம் வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. இதில் 10 சிறுத்தைகள் நடைபாதை பகுதியில் நடமாடிவருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.