ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு செல்ல தயார் - விஜயதாச ராஜபக்ஷ

#SriLanka #Easter Sunday Attack #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு செல்ல தயார் - விஜயதாச ராஜபக்ஷ

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உள்ளுர் விசாரணைக்கு அன்றி சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் தொடர்பில் மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (07.09) ஊடவியலாளர் சந்திப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு எதிராக பல்வேறு காணொளி அறிக்கைகளை முன்வைப்பார்கள் எனவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

சனல் 4 புலம்பெயர் மக்களுக்கு ஆதரவான அலைவரிசை என்றும், ஆனால் அவை ஒளிபரப்புச் செய்வதால் ஏதேனும் சம்பவம் நடந்திருந்தால் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4