சுவிட்சர்லாந்தில் ஒருவர் சொந்த தொழிலை மேற்கொள்ளல் எப்படி?

#Switzerland #சுவிட்சர்லாந்து #சுவிஸ் #சுவிஸ்சர்லாந்து #Swiss #Swiss Law #Online job
சுவிட்சர்லாந்தில் ஒருவர் சொந்த தொழிலை மேற்கொள்ளல் எப்படி?

எந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர் என்பதிலும் எதற்காக இந்நாட்டிற்குள் வந்தவர் என்பதைப் பொறுத்தும் சுவிஸில் வேலை செய்யவோ சொந்த நிறுவனம் தொடங்கவோ முடியும். 

எப்படியாயினும் வேலை செய்பவர்கள் சமூகக்காப்புறுதிகளையும் வரிகளையும் செலுத்த வேண்டும்.

 வேலைக்கு அனுமதி

 வேலைக்கு அனுமதி பற்றிய கேள்விக்குப் பதில் வதிவிட அனுமதி கிடைக்கும் போதே தெரிந்துவிடும். சாதாரணமாக சுவிஸில் வதிவிட உரிமை பெற்றவர்கள் வேலை செய்யலாம்.

 வழக்கமாக வேலை வழங்குபவர் தான் அனுமதிக்கு விண்ணப்பிப்பார். ஏதாவது சந்தேகங்களிருப்பின் கீழுள்ள ஏதாவது நிலையங்களில் உதவி பெறலாம். இந்த நிலையங்கள் சுவிஸில் இன்னும் குடியிருப்புக்கு வராமல் இங்கு வந்து வேலை செய்ய விரும்புபவர்களுக்கும் ஆலோசனை கொடுக்கும்.

அகதி அந்தஸ்துப் பெற்றவர்களுக்கும் (B காட்) அகதி அந்தஸ்து ஏற்கப்பட்டோ அல்லது ஏற்கப்படாமலோ தற்காலிக வதிவிட அனுமதி (F காட்) பெற்றவர்களுக்கும் 2019 தொடக்கம் விசேட அனுமதி தேவையில்லை.

 ஒவ்வொரு வேலையின் தொடக்கத்திலும் முடிவிலும் உத்தியோகபூர்வ படிவமூலம் மாநிலத்திற்கு அறிவிக்க வேண்டும் (அறிக்கையளிக்கும் கடமை | Meldepflicht | Procédure d'annonce). வேலை செய்யும் இடத்து மாநிலமே இதற்குப் பொறுபாகும்.

 இந்த பதிவு இலவசமானது. அகதி அந்தஸ்துத் தேடுபவர்களுக்கு (N காட்) தொடர்ந்தும் அனுமதிப் பத்திரம் தேவை

images/content-image/1694099632.jpg

 சொந்த நிறுவனம்

 சுவிஸில் யாராவது சொந்த நிறுவனம் தொடங்க வேண்டுமாயின் அது அவரது தேசிய இனத்திலும் வதிவிட அனுமதி நிலையிலும்; தங்கியுள்ளது.

EU/EFTA - நாட்டவர்களும், நிரந்தர வதிவிட அனுமதி C பெற்றவர்களும் இலகுவாக சொந்த நிறுவனம் தொடங்கலாம். சொந்தமாகத் தொழில் தொடங்குபவர்கள் தமது கிராம சபைகளில் அறிவிக்க வேண்டும்.  

EU / EFTA நாடுகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பொருளாதார விவகாரங்களுக்கான அலுவலகத்தில் எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை முன்பே சமர்ப்பிக்க வேண்டும்.

 வேறு நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களும் சொந்த நிறுவனம் தொடங்கலாம் என்பது பற்றி குடிவரவு பிரிவு (Migrationsdienst | Service des migrations) அறியத்தருகிறது. யார் சுயாதீனமாக வேலை செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் தமாகவே AHV இழப்பீட்டு நிதி, குடும்ப இழப்பீட்டு நிதி மற்றும் விபத்து காப்பீடு மற்றும் ஓய்வூதிய நிதியுடன் பதிவு செய்ய வேண்டும்.

 அனுமதி பெறாத வேலை

 ஊதியம் பெறும் ஒவ்வொரு வேலையும் பொறுப்பான அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். வேலை அனுமதிப்பத்திரமின்றி சமூகக்காப்புறுதிகளுக்குப் பதியாமல் வருமானத்திற்குரிய வரியைக் கட்டாமல் வேலை செய்தால் தண்டணைக்குரிய குற்றமாகும்.

 இதை அனுமதி பெறாத வேலை (Schwarzarbeit) என்பர். அனுமதி பெறாத வேலை செய்தால் சட்டப்படியான பின் விளைவுகளை வேலை வழங்குபவரும் வேலை செய்பவரும் அடையவேண்டியிருக்கும். 

கூடுதலாக, சட்டவிரோதமாக வேலை செய்யும் எவருக்கும் வேலையின்மை, விபத்து அல்லது இயலாமைக்கு எதிராக காப்பீடு செய்யப்படுவதில்லை மற்றும் ஓய்வூதியமும் இல்லை.

 வேலைவழங்குபவர் சரியான முறையில் செய்யவில்லையெனக் கருதினால் இலவச சட்ட ஆலோசனை நிலையத்தை (Rechtsberatungsstelle | bureau de conseil juridique ) நாடலாம்.

images/content-image/1694099570.jpg

 இளைஞர்கள்

 அடிப்படையில் 15 வயதையடைந்த இளைஞர்கள் வேலை செய்யலாம். இலேசான வேலைகளைக் குறைந்த காலத்திற்கு (உ+மாக விடுமுறை வேலை) செய்வதற்கு அனுமதிக்கப்படும். பெற்றோரும் வேலை வழங்குபவர்களும் இளைஞர்களிற்கு அதிக நெருக்கடி கொடுக்காமல் இருப்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்குப் பிரத்தியேகத் தொழிற்சட்ட விதிமுறைகளுள்ளன.