அடுத்த வருடத்தில் இருந்து ஆசிரியர் பயிலுனர்கள் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படமாட்டார்கள்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #University
Thamilini
2 years ago
அடுத்த வருடத்தில் இருந்து ஆசிரியர் பயிலுனர்கள் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படமாட்டார்கள்!

அடுத்த வருடம் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்கள் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமல், அனைத்து கல்லூரிகளையும் இணைத்து ஸ்தாபிக்கப்படும் இலங்கைக் கல்விப் பல்கலைக்கழகத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஊவா தேசிய கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையின் எதிர்பார்க்கப்படும் கல்விப் பல்கலைக்கழகத்தை 2027ஆம் ஆண்டுக்குள் பதிவுசெய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமாக, இளங்கலைப் பட்டம் பெற்ற ஆசிரியர்களை உருவாக்கும் நிறுவனமாகத் தருவது தனது நம்பிக்கை எனக் கூறினார். 

இதன்படி, அடுத்த வருடம் முதல், ஆசிரியர் பயிலுனர்கள். கல்லூரிக்கு அல்லாமல் பல்கலைக்கழகத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும், இது குறித்து விரிவான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4