கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு

#SriLanka #rice #prices
Prathees
2 years ago
கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு

கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கீரி சம்பா அரிசி இருப்பு வைத்துள்ள சில தொழிலதிபர்கள், கட்டுப்பாட்டு விலையான ரூ.260க்கு மேல், பல்வேறு விலையில், 300 முதல், 325 ரூபாய் வரை, கீரி சம்பா அரிசியை விற்பனை செய்கின்றனர்.

 அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசி இருப்பை அதிகபட்ச சில்லறை விலைக்கு அருகில் மொத்த விலைக்கு விடுவதால், நாடு, சிவப்பரிசி, சம்பா அரிசி விற்பனையில் அதிக லாபம் கிடைப்பதில்லை என அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

 அரிசி ஆலைகள் மிகக் குறைந்த அளவிலான கீரி சம்பா அரிசியை மொத்த விலையில் கிலோ 298-300 ரூபாய்க்கு வெளியிடுவதால் சந்தையில் கீரி சம்பா தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4