ஹோமாகம நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள சமுர்த்தி வங்கியில் திருட்டு

#SriLanka #Bank #Robbery #samurthi
Prathees
2 years ago
ஹோமாகம நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள சமுர்த்தி வங்கியில் திருட்டு

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தை அண்மித்துள்ள சமுர்த்தி பிரஜா நிதி வங்கியின் பெட்டகத்தை அறுத்து சுமார் 900,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 நேற்று (06) இரவு அல்லது இன்று காலை இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 ஹோமாகம சமுர்த்தி சனசமூக நிதி வங்கியின் பின்புற பகுதியில் உள்ள ஜன்னலின் இரும்பு கம்பிகளை அறுத்தும், பெட்டகத்தின் ஓரத்தில் ஒரு சதுர பகுதி வெட்டப்பட்டும் இருப்பதாக ஹோமாகம சமுர்த்தி சமூக நிதி வங்கியின் முகாமையாளர் இன்று (07) பிற்பகல் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

இரண்டாவது பிரிவின் சுவருடன் இணைக்கப்பட்டு, அங்கு வைப்பிலிடப்பட்டிருந்த 864,891 ரூபா பணம் திருடப்பட்டிருந்தது.

 இரவில் பெய்த மழைக்கு மத்தியில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார்,வங்கியின் சொந்த மின்சாரத்தை பயன்படுத்தி பெட்டகத்தை வெட்டியதாக கூறப்படுகிறது.

 இந்த திருட்டில் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4