பேருந்தில் பயணம் செய்த பெண் மீது துப்பாக்கிச் சூடு

#SriLanka #Crime #GunShoot
Prathees
2 years ago
பேருந்தில் பயணம் செய்த பெண் மீது துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடையில் இருந்து கொக்கல நோக்கிச் சென்ற பேருந்தில் பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் பஸ்ஸில் ஏறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூலை மாதம் கொக்கல்ல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நபர் ஒருவரை இலக்கு வைத்து சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் தாய் இந்த பெண் என பொலிஸார் தெரிவித்தனர். 

 சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4