அதிர்ஷ்டம் கூடும் மூன்று ராசிக்காரர்கள் - அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அதிர்ஷ்டம் கூடும் மூன்று ராசிக்காரர்கள் - அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் செயல்கள் இன்று லாபமாகும். சகோதரர்கள் உதவியால் ஒரு எண்ணம் நிறைவேறும். பரணி: தைரியம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். கார்த்திகை 1: வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் உண்டான பிரச்னைகள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். கடவுள் வழிபாட்டால் உங்கள் சங்கடம் தீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: சங்கடங்களை எல்லாம் சமாளித்து நினைத்ததை அடைவீர்கள். முயற்சி வெற்றியாகும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் என்றாலும், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருவாதிரை: செயலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அடுத்தவருடன் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். புனர்பூசம் 1,2,3: விழிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். 

கடகம்

புனர்பூசம் 4: எதிர்பாராத செலவுகளால் சங்கடம் கூடும். பணியின் காரணமாக அவசர பயணம் மேற்கொள்வீர்கள். பூசம்: எதிர்பார்த்த தொகை இன்று கைக்கு வரும் என்றாலும், அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். ஆயில்யம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள் என்றாலும் மனதில் குழப்பம் அதிகரிக்கும். 

சிம்மம்

மகம்: தடைபட்ட வருவாய் வந்து சேரும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பூரம்: தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். நண்பர்களால் ஆதாயமும் பணவரவும் அதிகரிக்கும். உத்திரம் 1: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். அஸ்தம்: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். கோயில் வழிபாட்டில் மனம் செல்லும். சித்திரை 1,2: தடைபட்டிருந்த முயற்சி நிறைவேறும். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். 

துலாம்

சித்திரை 3,4: பண வரவில் இருந்த நெருக்கடி விலகும். செயல்களில் ஆதாயம் உண்டாகும். சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். நண்பர்கள் ஆலோசனை நன்மையை உண்டாக்கும். விசாகம் 1,2,3: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். 

விருச்சிகம்

விசாகம் 4: பிரச்னைகள் தேடி வரும். உங்கள் செயல்களில் எதிர்பாராத சங்கடங்கள் உண்டாகும். அனுஷம்: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கேட்டை: செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். எதிர்பாலினரிடம் எச்சரிக்கை அவசியம். 

தனுசு

மூலம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். பூராடம்: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் செயல் வெற்றியாகும். உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும். பகைவர்கள் தொல்லை விலகும். மனதில் உற்சாகம் உண்டாகும். திருவோணம்: உங்கள் மீது ஏற்பட்ட பழி விலகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவிட்டம் 1,2: திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயம் காண்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சதயம்: புத்தி சாதுரியமாக செயல்பட்டு ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். புதிய முயற்சி லாபமாகும். பூரட்டாதி 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செயல்களில் சாதகமான நிலை உண்டாகும். 

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். பணியிடத்தில் சில நெருக்கடிகளை இன்று சந்திப்பீர்கள். உத்திரட்டாதி: உடன் பணி புரிபவர்களால் தொல்லைகள் தோன்றும். உங்கள் செயல்களில் கவனம் தேவை. ரேவதி: உங்களுக்கு உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பார்கள்.