தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: மூவர் படுகாயம்

#SriLanka #Accident
Prathees
2 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்  விபத்து: மூவர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கெப் வண்டியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட பகுதியில் 22.4 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (08) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 விபத்து இடம்பெற்ற போது கெப் வண்டியில் 06 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 அத்துருகிரியில் இருந்து தொடங்கொடை நோக்கி கேப் சென்று கொண்டிருந்ததுடன், சாரதி தூங்கியதால் விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4