வியாபாரத்தில் புதிய முயற்சிகளை நிறைவேற்றும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வியாபாரத்தில் புதிய முயற்சிகளை நிறைவேற்றும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: முயற்சியில் வெற்றி உண்டாகும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பரணி: செயலில் வேகம் இருக்கும். வருமானத்திற்கு வழி காண்பீர்கள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை விலக்குவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நிதிநிலை உயரும். ரோகிணி: வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மிருகசீரிடம் 1,2: சுய தொழில் செய்து வருபவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: இன்றைய செயல்களில் குழப்பம் உண்டாகும் என்பதால் விழிப்புணர்வு அவசியம். திருவாதிரை: யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் கவனம் அவசியம். புனர்பூசம் 1,2,3: பயணத்தில் கவனம் தேவை. மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சல் கூடும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பொறுமை அவசியம். பூசம்: பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். ஆயில்யம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நன்மை அடைவீர்கள்.

சிம்மம்

மகம்: வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசு வழி முயற்சியில் ஆதாயம் உண்டாகும். பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்திரம் 1: பழைய கடன் வசூலாகும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்களுடைய புதிய முயற்சி நிறைவேறும். சித்திரை 1,2: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி இன்று வரும்.

துலாம்

சித்திரை 3,4: குடும்பப்பிரச்னை தீரும். புதிய வாகனம் வாங்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும். சுவாதி: தடைபட்டிருந்த செயல்களை மீண்டும் தொடர்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். அதில் ஆதாயம் காண்பீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: செயலில் கவனம் தேவை. வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை உண்டாகாமல் போகும். அனுஷம்: இனம் புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர்கள். கடன் கொடுத்தவர்கள் நெருக்குவார்கள். கேட்டை: வாகனப் பயணத்தில் கவனமுடன் செயல்படுங்கள். வரவு செலவில் சங்கடங்கள் தோன்றலாம்.

தனுசு

மூலம்: வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பூராடம்: நீண்ட நாள் முயற்சி இன்று பலன் தரும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உத்திராடம் 1: தடைபட்டிருந்த வேலைகளை இன்று மீண்டும் தொடங்குவீர்கள். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்பார்த்த பணம் வீடு தேடி வரும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். திருவோணம்: விஐபிகள் ஆதரவுடன் ஒரு முயற்சியை நிறைவேற்றி லாபமடைவீர்கள். வரவு அதிகரிக்கும். அவிட்டம் 1,2: பொது நலனில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: திட்டமிட்ட செயல்கள் நடந்தேறும். குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சதயம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். பூரட்டாதி 1,2,3: நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை செய்து வெற்றி காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும்.

மீனம்

பூரட்டாதி 4: வேலைப்பளு கூடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும். உத்திரட்டாதி: தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். ரேவதி: அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளைக் கண்டறிந்து நீக்குவீர்கள்.