களுத்துறை பகுதியில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamil News
Thamilini
2 years ago
களுத்துறை பகுதியில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

களுத்துறை, செருபிட்ட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று (08.09) இடம்பெற்றுள்ளது. 

களுத்துறை செருபிட்ட கொழும்பு வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய  செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் நேற்று மாலை இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய  நிலையில், பக்கத்து வீட்டின் முன் வெட்டுக்காயங்களுடன்  கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலைசெய்யப்பட்ட நபரிடம் சந்தேகநபர் கடன் பெற்றுள்ளதாகவும், அதனை மறுநாள் மீண்டும் கேட்டபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4