அதிகம் பகிருங்கள் அவர்களும் எமது உறவுகளே! தட்டிக் கேக்க யாரும் இல்லை என்ற ஆணவமா?

#SriLanka #Jaffna #Hospital #இலங்கை #லங்கா4 #யாழ்ப்பாணம் #மருத்துவமனை #Nurse
அதிகம் பகிருங்கள் அவர்களும் எமது உறவுகளே! தட்டிக் கேக்க யாரும் இல்லை என்ற ஆணவமா?

 நான் கடந்த சிலமாதங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றம் கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலை இரண்டிலும் நேரத்தை செலவழித்துள்ளேன்.. 

 அந்த அனுபவத்தில சொல்றன் இந்த வடக்கு வைத்தியசாலைகளிலுள்ள ‘தாதிமார்’ மற்றும் ‘வாட்பாய்களின்’ திமிர்த்தனமும் மக்களை மதிக்காத தன்மையும் தான் எம் சாபக்கேடு, வருவது நோயாளர்கள் மற்றும் அவர்களோடு கூட வருவோர் எந்தளவு மனவழுத்தத்தோடு வருவார்கள் என்பதை சிந்தித்தும் அவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை, கேட்டால் வேலைப்பழு என்பார்கள் யாருக்கு தான் இல்லை வேலைப்பழு அதன் தாக்கத்தை நோயாளர்கள் மீது காட்ட யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது?

 யாழ்ப்பாண வைத்தியசாலையில் வாசல்ல நிக்கிற பாதுகாப்பு அதிகாரிக்கு தான் ஜனாதிபதி மாளிகையில் நிற்பது போன்ற ஓர் உணர்வு தான் மோலோங்கியிருக்கும் பதில் சொல்லக்கூட அவர்களுக்கு நேரமில்லை சரி அதெல்லாம் தாண்டி உள்ள போனால் வாட்ல கதிரை ஒன்றில் நாம் அமரந்துவிடக்கூடாது, அமரந்தால் போச்சு நேர்ஸ்சம்மா உடன ஆசிரியர் அவதாரம் எடுத்து யார் எவர் என்ற கணக்கில்லாம பாடம் எடுப்பா.

( நிக்கிற ஆள் கடும் படிச்சாளா இருக்கும் ,இவா A/L ஓட பெட் துணிமடிக்கிறது எப்பிடி எண்டு பக்கத்தில இருக்கிற நர்சிங் பாடசாலையில படிச்சிட்டு வந்தவாவா இருப்பா-இந்த வார்த்தைகளுக்கு மன்னிக்கோணும் அவ்வளவு எரிச்சலும் கோபமும்) சாப்பாடு ஏதோ இவைன்ட வீட்டில இருந்து வாறமாதிரி அதை விநியோகிக்கேக்க எந்த ஒழுங்கும் இல்ல, சரி அது முடிஞ்சா 11.50க்கு வருவினம் பாதுகாப்புபடையினர் மட்டுமரியாதை ஒண்டுமில்ல அவையள்ட வாயிலை இருந்து ‘அம்மா வெளியேறுங்கோ’ ‘அய்யா வெளியேறுங்கோ’ அதுவும் ஏதோ 12.01 ஆகினா செத்துப்போயிருவினம் எண்டமாதிரி உணர்வு, 

ஒரு சாப்பாடு அவசரத்துக்கு கொண்டுபோகேலாது, ஒரு சந்தேகம் கேட்கேலாது,ஏனெண்டா வைத்தியருக்கும் தாதியருக்குமான அரட்டை குழம்பீரும் பாருங்கோ, இருப்பது நோயாளிகள் என்பதை மறந்து அரட்டையும் சிரிப்பும் காதை துளைக்கும், அவசரத்துக்கு ஏதாவது கேட்டாலும் கிடைக்காது, இந்த அவதானிப்புக்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்தில் நான் அனுபவித்தது 

 ஆனால் சகோதரமொழிபேசும் ஓர் இடத்தில் தாதியர்கள் at least கொஞ்சமாவது உணர்வோடு இருக்கிறார்கள் கொஞ்சம் ஆறுதலாக கதைக்கிறார்கள், அவசரத்துக்கு எந்நேரமும் உள்ளே போய் வரக்கூடியவாறு உள்ளது, There are many differences, அந்த பிள்ளையின் கையோடு அதன் எதிர்காலமும் சேர்த்து அகற்றப்பட்டுள்ளது, இந்த செய்தியை அறிஞ்சதில இருந்து கடும் வேதனையும் கோபமும் தான் வருது, உங்கட வீட்டு ஆட்களா கூட வேண்டாம் சக மனிதர்களா பார்க்கிறதில என்ன பிரச்சினை உங்களுக்கெல்லாம்? 

 இந்த குற்ற உணர்ச்சியோடு எப்பிடி வாழப்போறீங்க? அந்த பிஞ்சு பிள்ளைட வலியோட கதறின முகம் கண்ணுக்க வந்துபோகாதா?

 பிரதி செய்யப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4