ஊழல் ஒழிப்பு சட்டமூலம் குறித்த வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #corruption
Thamilini
2 years ago
ஊழல் ஒழிப்பு சட்டமூலம் குறித்த வர்த்தமானி வெளியீடு!

ஊழல் ஒழிப்பு சட்டத்தின் ஏற்பாடுகள் இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இது குறித்து நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ விடுத்துள்ள அறிவிப்பில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி சட்டத்தின் ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊழல் தடுப்பு மசோதா கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. 

குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4