கிளிநொச்சியில் மெய்வல்லுநர் பயிற்சி நிலையம் ஆரம்பிப்பு!

#SriLanka #Kilinochchi #sports #education #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் மெய்வல்லுநர் பயிற்சி நிலையம் ஆரம்பிப்பு!

கிளிநொச்சியின் தென்மேற்குப் பிரதேசத்தில் மெய்வல்லுநர் பயிற்சிகளுக்கான மெய்வவல்லுநர் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது முழங்காவில் இரணைமாதா நகர் ரோமன் கத்தோலிக்க பாடசாலை மைதானத்தில் அப்பிரதேசத்தை சேர்ந்த 16 வயதிற்கு உட்பட்ட வீர வீராங்கனைகளை மெய்வல்லுனர் துறையில் ஊக்குவிப்பதற்காக மெய்வல்லுனர் பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 இந்த பயிற்சி நிலையம் ஆனது கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு பயிற்றுநர் பசுபதி ஆனந்தராஜ் அவர்களது வழிநடத்தலில் இரணைமாதநகர் றோ.க வித்தியாலயத்தின் ஆசிரியர் திரு செல்வரட்ணம் ஸ்டெனி அவர்களதும் அதிபர் கென்னடி அவர்களதும் மேற்பார்வையில் இரு பயிற்றுநர்களைக் கொண்டு தொடர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

 இந்த பயிற்சி நிலையத்தில் முழங்காவில் பிரதேசத்தினைச் சேர்ந்த 16 வயதிற்குட்பட்ட மெய்வல்லுனர் துறையில் ஆர்வம் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனுமதிக்கப்படுவர். 

பயிற்சிகள் யாவும் இலவசமாகவே வழங்கப்பட உள்ள. இந்த பயிற்சி நிலையத்தின் தொடர் பயிற்சிகளுக்காக கிளி சரவணா நிதியம், கனடா யுனைட்டட் தமிழ் ஸ்போர்ட்ஸ் கிளப், பி டபிள்யு டி பிளாஸ்டிக் வேர்க்ஸ் டிஸ்பிளே நிறுவனம் (கனடா) என்பன அனுசரணை வழங்குகின்றன.

images/content-image/2023/09/1694257544.jpg

images/content-image/2023/09/1694257528.jpg

images/content-image/2023/09/1694257514.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4