ஈஸ்டர் தாக்குதல் : குற்றவியல் நீதிமன்றத்தை நாட வேண்டும்!

#SriLanka #Easter Sunday Attack #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் : குற்றவியல் நீதிமன்றத்தை நாட வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து 64 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை அசாத் மௌலான ஐ.நாவிடம் சமர்ப்பித்துள்ளதாக புலனாய்வு செய்தியாளர் நிலாம்டீன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், அசாத் மௌலானா இலங்கையில் இருந்து தப்பிச் செல்கையில் இந்தியாவினூடாகவே சென்றதாகவும், அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்ற விடயங்கள் தெரியவராதமையினால் கொலை முயற்சிகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக அவர் இலங்கையில் இருந்திருந்தால் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் வத்திக்கான்  இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் எனவும் நிச்சயமாக கிறிஸ்தவ நாடுகள் போர் கொடி தூக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த விவகாரத்தை புலம் பெயர் அமைப்புகள்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4