மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த உயர்தர சுகாதார சேவையை பேணுவது அவசியம் - ரணில்!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த உயர்தர சுகாதார சேவையை பேணுவது அவசியம் - ரணில்!

வெளிநாட்டினரை சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு மருத்துவ சுற்றுலா மற்றும் உயர்தர சுகாதார சேவையை பேணுவது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

அதற்காக சுகாதாரக் கொள்கை மீள் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (08.09) பிற்பகல் ஜோசப் பிரேசர் வைத்தியசாலையின் 100வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட போது கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.  

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ அதிகளவான வைத்தியர்களை உருவாக்க இந்நாட்டில் அதிகளவான மருத்துவ பீடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும்  இந்த நாட்டில் உள்ள சுகாதார பணியாளர்கள் பலமான எதிர்காலத்திற்காக மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

ஜோசப் பிரேசர் மருத்துவமனை  பற்றிய கூறிய  அவர், "இலங்கையில் உள்ள இது போன்ற மருத்துவமனைகள் இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டவர்களுக்கும் தேவையான சேவைகளை வழங்க முடியும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். 

இந்த மருத்துவமனையைப் பார்க்கும்போது இது மருத்துவமனையா அல்லது ஹோட்டலா என்று கற்பனை செய்வது கடினம். ஒரு மருத்துவமனையின் சேவைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டுவதாகவும் அவர் கூறினார். 

அந்த சேவைகள் உயர்தரமானவை. அது பேணப்பட வேண்டும்.வெளிநாட்டவர்கள் அவர்களை சிகிச்சைக்காக இந்த நாட்டிற்கு அழைத்துவர முற்பட்டால் மருத்துவ சுற்றுலா மற்றும் சுகாதார சேவைகளை மிக உயர்தரத்தில் பராமரிப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4