உதயநிதியின் துணிச்சல் குறித்து நடிகர் சத்யராஜ் பெருமிதம்!

#Cinema #Actor #2023 #Tamilnews #ImportantNews #news
Mani
2 years ago
உதயநிதியின் துணிச்சல் குறித்து நடிகர் சத்யராஜ் பெருமிதம்!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் செப்டம்பர் 2ஆம் தேதி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமத்துவம் மற்றும் சமூக நீதியை சனாதன தர்மம் எதிர்க்கிறது, எனவே வெறும் எதிர்ப்பு மட்டும் போதாது; அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். மேலும் அவர் சனாதன தர்மத்தை டெங்கு மற்றும் கொரோனா போன்ற நோய்களை அகற்றும் முயற்சிக்கு ஒப்பிட்டார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஒய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் என பலர் கடிதம் எழுதி உள்ளனர்.

அதேநேரம், உதயநிதியின் பேச்சுக்கு ஒரு தரப்பினர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து உள்ளனர்.‌ அரசியல் அமைப்புகள் மட்டுமின்றி திரைப்பட இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற பிரபலங்களும் உதயநிதியின் கருத்துக்கு வரவேற்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “அமைச்சர் உதயநிதி மிகவும் தெளிவாக பேசியிருக்கிறார். அவருடைய சிந்தனை தெளிவாக உள்ளது. அவரின் கருத்தியல் ரீதியான தெளிவும், துணிச்சலும், ஒவ்வொரு விஷயத்தையும் கையாள்கிற விதத்தை பார்க்கும் பொழுதும் எனக்கு பெருமையாக உள்ளது. அவருக்கு எனது பாராட்டுக்கள்” என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4