தனியாக விடப்பட்ட குழந்தைகளின் தாயை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

#SriLanka #children #kurunagala
Prathees
2 years ago
தனியாக விடப்பட்ட குழந்தைகளின் தாயை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

குருநாகல் கீழ் கிரிபாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனிமையில் வாழும் மூன்று பிள்ளைகளின் பராமரிப்பிற்காக வெளிநாட்டில் உள்ள அவர்களது தாயை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலையிட்டுள்ளார்.

 அதன்படி குறித்த தாய் நாளை காலை நாடு திரும்புவார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 தாய் வெளிநாடு செல்றதாலும்இ தந்தை சிறையில் அடைக்கப்பட்டதாலும் அந்த மூன்று பிள்ளைகள் மட்டும் வீட்டில் உள்ளனர்.

 தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் அவர்களின் பள்ளிப் படிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி தனிமையில் இருக்கும் பிள்ளைகளின் தாயை உடனடியாக அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.

 குவைத் தூதரகத்தின் நேரடித் தலையீட்டின் பேரில், குவைத்திலிருந்து இன்று இரவு இலங்கைக்கு வரும் விமானம் மூலம் குழந்தைகளின் தாய் நாட்டுக்குக்கு அழைத்து வரப்படுவார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4