துலா ராசியினர் வேலைக்காக முயற்சித்தால் எண்ணம் நிறைவேறும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
துலா ராசியினர் வேலைக்காக முயற்சித்தால் எண்ணம் நிறைவேறும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: மதியம் வரை உங்களின் முயற்சி வெற்றியாகும். அதன்பின் சில நெருக்கடிகள் உண்டாகும். பரணி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். கார்த்திகை 1: குடும்பப் பிரச்னைகளை சரி செய்வீர்கள். சகோதரர்களின் ஆதரவு நன்மையை உண்டாக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ரோகிணி: வியாபாரத்தில் திருப்பம் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும். மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். தடைபட்ட வருவாய் வந்து சேரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மதியம் வரை முயற்சிகள் இழுபறியாகும். அதன்பின் உங்கள் முயற்சி நிறைவேறும். திருவாதிரை: நெருக்கடிகளால் மனதில் குழப்பம் உண்டானாலும், நண்பர்கள் உதவியுடன் அதற்கு தீர்வு காண்பீர்கள். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். முயற்சி ஒன்று நிறைவேறாமல் இழுபறியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: உறவினர்களால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். பண விஷயத்தில் கவனம் தேவை. பூசம்: மதியம் வரை அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் தேடிவரும். பேச்சில் கவனம் தேவை. ஆயில்யம்: சிலர் குடும்பத்தினருடன் கோயிலுக்கு செல்வீர்கள். புதிய இடம் வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்

மகம்: வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி கூடும். வியாபாரத்தில் லாபம் உண்டு. சேமிப்பில் கவனம் செல்லும். பூரம்: விஐபிகள் ஆதரவுடன் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். மதியத்திற்கு மேல் எதிர்பாராத செலவு ஏற்படும். உத்திரம் 1: உங்களின் செல்வாக்கு உயரும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை வெற்றி தரும். நண்பர்கள் உதவி செய்வார்கள். அஸ்தம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கூட்டுத் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். சித்திரை 1,2: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். உறவினரால் நன்மை உண்டு. சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வேலைக்காக முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். விசாகம் 1,2,3: சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். மனதில் இருந்த பயம் நீங்கும். அனுஷம்: நெருக்கடி விலகும். பெரியோர்களின் வழிகாட்டுதலால் உங்கள் முயற்சி நிறைவேறும். கேட்டை: பயணத்தில் இன்று கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

தனுசு: 

மூலம்: இன்று மதியத்திற்குபின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயல்களில் எச்சரிக்கை அவசியம். பூராடம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். உத்திராடம் 1: திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். உறவினரின் ஆதரவு உண்டாகும்

மகரம்

உத்திராடம் 2,3,4: பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவோணம்: நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். விரோதிகள் விலகிச் செல்வார்கள். அவிட்டம் 1,2: வெளி வட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பண வரவு மகிழ்ச்சி தரும். 

கும்பம்

அவிட்டம் 3,4: அஷ்டம செவ்வாயால் உடல் நிலையில் சில சங்கடங்கள் தோன்றும். ஓய்வை விரும்புவீர்கள். சதயம்: உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். பூரட்டாதி 1,2,3: வரவேண்டிய பணம் வீடு தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் 

மீனம்

பூரட்டாதி 4: விரும்பிய ஒன்றை போராடி அடைவீர்கள். குடும்பத்தில் உண்டான பிரச்னைகள் தீரும். உத்திரட்டாதி: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். சிலர் இன்று கோயிலுக்கு சென்று வருவீர்கள். ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு காண்பீர்கள். லாபம் அதிகரிக்கும்.