அரசாங்க பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கை

#SriLanka #government #Lanka4 #work
Kanimoli
2 years ago
அரசாங்க பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கை

தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக அரசாங்க பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது. சுற்றறிக்கை " குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாக கருதி அரசாங்க பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அதிகபட்சமாக 04 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்குமாறு சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 விடுமுறை விண்ணப்பிக்க தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது 10 மாதங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குழந்தையின் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதன்படி நிரந்தர அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை வளர்ப்பதற்காக அதிகபட்சமாக 04 மாதங்களுக்கு ஊதிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு மற்றும் ஊதியம் இல்லாத விடுமுறை என விடுமுறைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

 அதேபோன்று அரசாங்கத்தின் நிரந்தர பெண் உத்தியோகத்தர் ஒருவர் தத்தெடுக்கப்பட்ட குழந்தையை பராமரிப்பதற்காக 03 வேலை நாட்களுக்கான விசேட மகப்பேறு விடுமுறையையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை இந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளது" என பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4