அக்ஷர்தம் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி

#Temple #Lanka4 #President #London #Indian
Kanimoli
1 year ago
அக்ஷர்தம் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி

அக்ஷர்தம் கோயிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி இருவரும் வழிபட்டனர். ஜி20 மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் வெள்ளிக்கிழமை டெல்லி வந்தார்.

 இந்த பிரார்த்தனைக்குப் பின்னர் சுனக் அக்ஷர்தம் கோயிலில் இருந்து ராஜ்காட்டில் உலகத்தலைவர்களுடன் சேர்ந்து மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பிரிட்டிஷ் பிரதமர் வருகையையொட்டி, கோயிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏஎன்ஐயிடம் பேசிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், டெல்லியின் அக்ஷர்தம் கோயிலுக்கு செல்வேன் என்று தெரிவித்திருந்தார். 

ஜி20 மாநாட்டுக்கு வரும்போது, அவர் கோயிலுக்கு வருவேன் என்று தெரிவித்திருந்தார். அவருக்கு பிரதமர் மோடி மீது அதிக மரியாதை உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இதனால், ஜி20 மாநாடு மாபெரும் வெற்றியடைய பிரதமர் மோடிக்கு உதவுவதாக தெரிவித்தார்.

 ‘நான் இந்துவாக இருக்க பெருமைகொள்கிறேன். நான் அவ்வாறுதான் வளர்ந்தேன். நான் அப்படித்தான் இருக்கிறேன். நான் இங்கு இருக்கும் அடுத்த இரண்டு நாட்களில் கோயிலுக்கு செல்வேன். நாங்கள் இப்போதுதான் ரக்ஷாபந்தன் கொண்டாடினோம். என சகோதரி மற்றும் உறவினர் சகோதரிகளிடம் இருந்து ராக்கிகளை பெற்றுக்கொண்டேன்’ என்று சுனக் தெரிவித்தார்.

 எனக்கு ஜென்மாஷ்டமியை கொண்டாட நேரமில்லை. அதற்காக நான் கோயிலுக்கு சென்றுவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். எதிலாவது நம்பிக்கையுடன் இருப்பது முக்கியம், அது மன அழுத்தத்தில் இருக்கும்போது நம்பிக்கை கொடுக்கிறது என்று அவர் மேலும் தெரிவ்த்தார்.