வத்தளை பகுதியைச் சேர்ந்த நபர் நுவரெலியாவில் படுகொலை

#SriLanka #Police #NuwaraEliya #Lanka4
Kanimoli
2 years ago
வத்தளை பகுதியைச் சேர்ந்த நபர் நுவரெலியாவில் படுகொலை

நுவரெலியாவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீப்பிலிமான பகுதியில் நபரொருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 அத்துடன் சம்பவத்தில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையின் காரணம் காணி தகராறு காரணமாகவே இக் கொலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 அத்தோடு சந்தேக நபர் தற்போது தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுமென நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4