தர்மபுரம் மத்திய கல்லூரி வளாகத்தில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது

#SriLanka #School #Kilinochchi #Lanka4
Kanimoli
2 years ago
தர்மபுரம் மத்திய கல்லூரி வளாகத்தில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி வளாகத்தில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. அயலவர் தனது வீட்டு குப்பைகளிற்கு தீ வைத்த போது அது பாடசாலை வளாகத்திற்குள் பரவியுள்ளது.

images/content-image/1694357278.jpg

 குறித்த இடத்திற்கு விரைந்த கரைச்சி பிரதேச சபையின் தீ கட்டுப்பாட்டு பிரிவினர் தீ பரவலை முழுமையாக கட்டுப்படுத்தினர். தற்பொழுது மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி மற்றும் காற்றுடனான காலநிலையில் காணிகள், பொது இடங்களை துப்பரவாக வைத்திருக்க வேண்டும் எனவும், தீ பரவல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் இழப்புக்களை தடுக்க முடியும் எனவும் கரைச்சி பிரதேச சபையினர் தெரிவிக்கின்றனர்.

images/content-image/1694357289.jpg

 இடர்கள் வருமுன் காக்கும் வகையில் பொது இடங்கள், குடியிருப்புகள், நிறுவங்கள் அனைத்தையும் துப்பரவாக வைத்திருக்க முன்வர வேண்டும் எனவும் பிரதேச சபையினர் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் டெங்கு உள்ளிட்ட நோய் பரவலில் இருந்தும் பாதுகாப்பாக இருக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4