நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும்!

#SriLanka #weather #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும்!

நாட்டின் பலப்பகுதிகளில் இன்றும் (11.09) மழையுடனான வானிலையே நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

இதன்படி  மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 50 மில்லிமீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது. 

அதேபோல் மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. 

இதேவேளை வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலுமு், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், காற்றானது மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் முன்னரைக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4