வடமாகாண ரீதியில் விளையாட்டில் மீண்டும் முதலிடம் பிடித்த மன்னார் கல்வி வலயம்!

#SriLanka #NorthernProvince #Mannar #sports #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
வடமாகாண ரீதியில் விளையாட்டில் மீண்டும் முதலிடம் பிடித்த மன்னார் கல்வி வலயம்!

வடக்கு மாகாண ரீதியாக உள்ள கல்வி வலயங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் அதிக புள்ளிகளை பெற்று மன்னார் கல்வி வலயம் மாகாண ரீதியாக முதலாம் இடத்தை பிடித்துள்ளது.

 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட மாகாண விளையாட்டு விழா நிகழ்வானது யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த 06.09.2023 திகதி முதல்  10.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்களாக நடைபெற்றது. 

 இதில் மன்னார் கல்வி வலயம் மொத்தமாக 720 புள்ளிகளை பெற்று, முதலாம் இடத்தை பிடித்தது.

 வடமாகாண ரீதியாக விளையாட்டு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மைதானங்கள் என்பவறின் அடிப்படையில் வலுவான பல வலயங்கள் காணப்படுகின்ற போதும் உரிய பயிற்சி பெற சிறந்த மைதானம் கூட இல்லாத மன்னார் மாவட்ட மாணவர்கள் பல போட்டிகளில் புதிய சாதனைகளையும் படைத்து மாகாண ரீதியாக முதலாம் இடத்தையும் பெற்று வலயத்திற்கும் மாவட்டத்திற்கு ம் பெருமை சேர்த்துள்ளனர்.

 இதேநேரம் மன்னார் மடு வலயமும் இம்முறை பல சாதனைகளை நிகழ்த்தி 5 வது இடத்தை தக்க வைத்துள்ளது. மேலும், மாகாண ரீதியாக தொடர்சியாக மன்னார் மாவட்ட பல சாதனைகள் நிகழ்த்தி வருகின்ற நிலையில் தேசிய ரீதியில் இம்முறை மன்னாரை பிரதிநிதித்துவபடுத்தி பல வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4