நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள உணவகத்தினை அகற்றுவதற்கு முற்பட்ட மாநகர சபையினர்!

#SriLanka #Temple #Nallur #Tamilnews #sri lanka tamil news #shop
Mayoorikka
2 years ago
நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள உணவகத்தினை அகற்றுவதற்கு முற்பட்ட மாநகர சபையினர்!

யாழ்ப்பாணம் கோவில் வீதி நல்லூர் பிரதேசத்தில் நல்லூர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றினை மாநகரசபையினர் திடீரென அகற்றுவதற்கு முற்பட்டுள்ளனர்.

 பாதை எல்லையைத் தாண்டி அமைக்கப்பட்டுள்ளமையை காரணம் காட்டி குறித்த உணவகம் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 நல்லூர் முருகன் ஆலய உற்சவ காலத்தினை முன்னிட்டு மாநகரசபை அதை இடித்து அப்புறப்படுத்துமாறு உரிமையாளருக்கு நோட்டிஸ் அனுப்பியது.

 பலவருடங்களாக அதைக் கவனிக்காத நகரசபை நல்லூர் உற்சவ காலத்தில் திடீரென அகற்றச் சொன்னது தொடர்பில் அங்குள்ளவர்கள் கவலை தெரிவித்தனர் . 

 உரிமையாளர் இவ்விடையம் தொடர்பில் தியாகி அறக்கட்டளை நிறுவுனரின் கவனத்திற்கு கொண்டுவந்து உதவுமாறு கோரிக்கை விடுத்தார் .

 இவை தொடர்பில் ஆராய்ந்த தியாகி தியாகேந்திரன் வாமதேவா மேலதிகமான சர்ச்சைக்குரிய கட்டடப்பாகத்தை அகற்றி மீள கடையை புனரமைத்துக் கொடுத்ததோடு உற்சவ கால வியாபாரத்திற்காக கடைக்கு வேண்டிய அத்தனை பொருட்களையும் உரிமையாளருக்கு வழங்கி உதவியுள்ளார்.

images/content-image/2023/08/1694422661.jpg

images/content-image/2023/09/1694422645.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4