சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு வேறு நீதிமன்றத்தில்

#SriLanka #Court Order #Wimal Weerawansa #wife
Prathees
2 years ago
சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு வேறு நீதிமன்றத்தில்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி திருமதி.சஷி வீரவன்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட வழக்கை உடனடியாக வேறு விசாரணைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு பிரதான நீதவானுக்கு நேற்று (11ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கை இனிமேல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரிக்கக் கூடாது எனவும், அதனை இன்று (12) அழைத்து கொழும்பு இலக்கம் இரண்டு மேலதிக நீதவானிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு மேலும் உத்தரவிட்டுள்ளார். 

 குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், விசாரணையை தேவையற்ற காலதாமதமின்றி முடிப்பதே பிரதான நீதவானின் நோக்கமாகும் என சுட்டிக்காட்டினார்

எனினும், பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அந்த நீதிமன்றத்திற்கு அழைப்பாணை அனுப்புவதற்கு பிரதிவாதி ஆட்சேபனை தெரிவித்திருப்பதால், உரிய உத்தரவை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4