கடன் மேலாண்மை பற்றி மிகக் குறைந்த அறிவைக் கொண்ட இலங்கையர்கள்

#SriLanka
Prathees
2 years ago
கடன் மேலாண்மை பற்றி மிகக் குறைந்த அறிவைக் கொண்ட இலங்கையர்கள்

இலங்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கடன் தகவல் பணியகத்தில் (Crib) பதிவு செய்யப்பட்டுள்ளதால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து கடனைப் பெற முடியாது என இலங்கை கடன் தகவல் பணியகத்தின் பொது முகாமையாளர் புஷ்பிகா ஜயசுந்தர தெரிவித்தார். 

 தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையர்களின் கடன் முகாமைத்துவ அறிவு மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதே இதற்குக் காரணம் எனவும் ஜெயசுந்தர தெரிவித்தார்.

 பலர் தங்களது கடன் மற்றும் குத்தகைத் தவணைகளை முறையாகச் செலுத்திய போதிலும், சில நிதி நிறுவனங்கள் உரிய தகவல்களைப் புதுப்பிக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 இந்நிலைமையை சரிசெய்வதற்காக, இலங்கை கடன் தகவல் பணியகம், கடன் முகாமைத்துவம் தொடர்பில் இலங்கை மக்களுக்கு தெளிவுபடுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

 எந்தவொரு நபரும் நிதி நிறுவனம் ஒன்றிற்கு செல்லாமல் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் http://www.crib.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தனது கடன் தகவல் அறிக்கையை பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4