தென்னையில் ஏற்பட்ட வரும் செவ்வண்டு, கருவண்டு தாக்கம் தொடர்பாக மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #Tamil News
Kanimoli
2 years ago
தென்னையில் ஏற்பட்ட வரும் செவ்வண்டு, கருவண்டு தாக்கம் தொடர்பாக மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

தென்னையில் ஏற்பட்ட வரும் செவ்வண்டு, கருவண்டு தாக்கம் தொடர்பாக மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த நோய்த் தாக்கம் தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண தெங்கு அபிவிருத்தி சபையின் முகாமையாளர் வைகுந்தன் தலைமையில் இன்றைய தினம் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெற்றது.

 செவ்வண்டு, கருவண்டு, வெண்புள்ளி நோய்த் தாக்கம் தொடர்பிலும், இதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் குறித்த தெளிவூட்டும் நிகழ்வு நடைபெற்றது. தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக செவ்வண்டு, கருவண்டு தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் அத்துடன் வெண்புள்ளி நோய் மைட்ஸ் நோய் என பல்வேறு வகையான நோய்த்தாக்கம் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இதன் காரணமாக தேங்காய் உற்பத்தியில் கடும் வீழ்ச்சி காணப்படுவதாகவும், குறித்த நோய்த் தாக்கத்தினை தென்னை உற்பத்தியாளர்களே சிகிச்சை அளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்போது, சிகிச்சை எவ்வாறு அளிக்க முடியும் எனவும், எந்த வகையான மருந்துகளை பயன்படுத்த வேண்டும் எனவும் மக்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்பட்டது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4