ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பலி : கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் சம்பவம்!

#SriLanka #Lanka4 #Train #sri lanka tamil news
Thamilini
2 years ago
ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பலி : கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் சம்பவம்!

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை புகையிரத நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

இந்த விபத்து நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இந்த நபர் ரயிலில் இருந்து குதித்தாரா அல்லது கீழே விழுந்தாரா என்பது குறித்து சந்தேகம் நிலவுகின்ற நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4