அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 338 ஓட்டங்கள் குவித்தது

#Australia #Lanka4 #sports #Tamilnews #SouthAfrica #Sports News
Kanimoli
2 years ago
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 338 ஓட்டங்கள் குவித்தது

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 338 ஓட்டங்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது.

 முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் மற்றும் பவுமா இருவரும் அதிரடியில் மிரட்டினர். அவுஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் குவித்தது.

 டி காக் 82 (77) ஓட்டங்களில் அவுட் ஆனதைத் தொடர்ந்து, கேப்டன் பவுமாவும் 57 (62) ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஹென்ரிக்ஸ் 39 ஓட்டங்களில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். ஆனால் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம், எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். சிக்ஸர் பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட அவர் 74 பந்துகளில் 102 ஓட்டங்கள் விளாசினார்.

 இதில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் அவருக்கு பக்கபலமாக ஆடிய ஜென்சென் 16 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 338 ஓட்டங்கள் குவித்தது. அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் ஹெட் 2 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ், எல்லிஸ் மற்றும் சங்கா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4