மகர ராசியினருக்கு அரசு வகையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
மகர ராசியினருக்கு அரசு வகையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பரணி: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வருமானம் கூடும். உங்கள் செல்வாக்கு உயரும். கார்த்திகை 1: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைக்கு பேசி தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: துணிச்சலாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். ரோகிணி: திடீர் பயணத்திற்கு வாய்ப்புண்டு. உங்கள் செயல்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். மிருகசீரிடம் 1,2: எந்தவொரு வேலையிலும் அலட்சியம் வேண்டாம். மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்களது நீண்டநாள் எண்ணம் இன்று பூர்த்தியாகும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். திருவாதிரை: சகோதரர்கள் வழியில் நன்மைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புனர்பூசம் 1,2,3: தைரியமுடன் செயல்பட்டு விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: இரண்டு நாட்களாக மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவு பிறக்கும். உங்கள் முயற்சி பலிதமாகும். பூசம்: வரவேண்டிய பணம் இன்று வந்து சேரும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஆயில்யம்: முந்தைய அனுபவத்தைக் கொண்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் இருந்த தடை அகலும் என்றாலும், செயல்களில் எச்சரிக்கை அவசியம். பூரம்: செலவுகள் கட்டுக்குள் வரும். யோசித்து செயல்பட நன்மை அதிகரிக்கும். உத்திரம் 1: குழப்பம் விலகும். கவனமுடன் செயல்பட்டு பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதிநிலை உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: அலைச்சலும் செலவும் கூடும். வெளியூர் பயணத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறாமல் போகும். அஸ்தம்: உங்கள் முயற்சிகள் இழுபறியாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சித்திரை 1,2: எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். உறவினர்களால் சங்கடங்கள் தோன்றும்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்பார்த்த பணம் இன்று வந்து சேரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுவாதி: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசு வகையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். விசாகம் 1,2,3: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். அனுஷம்: தொழிலை விரிவு செய்ய நண்பர்களுடன் ஆலோசிப்பீர்கள். பெரியோர் ஆதரவு நன்மை தரும். கேட்டை: நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பூராடம்: குழப்பங்கள் விலகும். குலதெய்வ அருளால் உங்கள் முயற்சி நிறைவேறும். உத்திராடம் 1: முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்பாராத நெருக்கடிகளுக்கு ஆளாகலாம் என்பதால் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். திருவோணம்: கடவுள் வழிபாடு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். அவிட்டம் 1,2: புதிய முயற்சிகளில் விழிப்புணர்வு அவசியம். உங்கள் தனித்திறனால் ஒரு செயலை முடிப்பீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சதயம்: நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு ஒன்று எளிதாக நிறைவேறும். பூரட்டாதி 1,2,3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆதாயமாகும். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உத்திரட்டாதி: வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். தடைபட்டிருந்த ஒரு முயற்சியை மீண்டும் தொடர்வீர்கள். ரேவதி: நீண்ட நாள் பிரச்சினை ஒன்றில் முடிவு காண்பீர்கள். போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.