நல்லூர் சப்பறத் திருவிழா: மூச்சுத்திணறலால் அவதியுற்ற மக்கள்

#SriLanka #Jaffna #Nallur #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
நல்லூர் சப்பறத் திருவிழா: மூச்சுத்திணறலால் அவதியுற்ற மக்கள்

யாழ் நல்லூர் சப்பறத் திருவிழா நேற்று (12.09) நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் பக்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

குறிப்பாக சனநெரிசல் காரணமாக பெரும்பலான பக்தர்கள் மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். 

பருத்தித்துறை வீதி பாதை முற்றாக மூடப்பட்ட நிலையில் மற்றைய சிவன்கோவில் பாதையிலும் மாநகர சபை தடுப்புக்கள் முற்றாக விலத்தப்படாததால் சனநெரிசல் அதிகரித்துள்ளது. 

images/content-image/1694572036.jpg

இதனால் பலர் மூச்சுத்திணறல்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், நோயாளர் காவு வண்டி வருவதிலும் சிரம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் பெருந்திரளான பக்தர்கள் ஒன்றுக்கூடிய நிலையில், இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட விஷமிகள் சிலர் கொள்ளை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை பருத்தித்துறை வீதியை மறித்து நல்லூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகத்தினால் இரும்பு தகடுகளால் அடைக்கப்பட்ட பாதையும் இதன்போது பக்தர்களால் உடைக்கப்பட்டது.

images/content-image/1694571963.jpg

images/content-image/1694572097.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4