அபிவிருத்தி திட்டங்கள் குறித்து மாவட்ட, பிரதேச குழுக்கள் அறிந்திருக்க வேண்டும் - சமன் ஏக்கநாயக்க!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
அபிவிருத்தி திட்டங்கள் குறித்து மாவட்ட, பிரதேச குழுக்கள் அறிந்திருக்க வேண்டும் - சமன் ஏக்கநாயக்க!

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும் போது  அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி  ஊடக பிரிவு அறிவித்துள்ளது.  

அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள்,  மாகாண பிரதம செயலாளர்கள்,  மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம் இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி அரச மற்றும் அரை-அரச நிறுவனங்களால்,  மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்து,  செயல்படுத்தும் போது அது குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்காமையினால் அரச அதிகாரிகளுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும்  மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகளை சமர்ப்பித்து வருவதுடன்  அரச அதிகாரிகளுக்கும்,  அரசியல் பிரதிநிதிகளுக்குமிடையிலான தொடர்பு இன்மையால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே இனிமேல் அரச மற்றும் அரை அரச நிறுவனங்கள் மூலம் மாவட்ட மட்டத்திலோ அல்லது பிரதேச மட்டத்திலோ அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடும்போதும், செயல்படுத்தும் போதும்,  மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அது குறித்து அறிவித்து அவர்களின் ஒத்துழைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் செயல்படுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தனது கடிதத்தில் அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4