புகையிரத சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Train #sri lanka tamil news #Driver
Thamilini
2 years ago
புகையிரத சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புகையிரத சாரதிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றும் (13.09) தொடர்கின்ற நிலையில், அவர்களை பணிக்கு திரும்புமாறு புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அவ்வாறு பணிக்கு திரும்பாத சாரதிகளுக்கு அவர்கள் தங்கள் பணியில் இருந்து நீங்கியதாக கருதப்படும் என்றும், இது குறித்த உரிய கடிதங்கள் அனுப்பிவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத இன்ஜின் சாரதிகள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பினால் மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4