அரச நிறுவனங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் : விசாரணைகள் ஆரம்பம்!

#Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
அரச நிறுவனங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் : விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (13) விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இது தொடர்பில்  கருத்து வெளியிட்டுள்ள  தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் கனக ஹேரத், சைபர் தாக்குதலில் ஈடுபட்ட குழுவின் தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

ஆகஸ்ட் 26ஆம் திகதி பல அரச நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் தரவுகள் காணாமல்போயுள்ளதாகவும், அதனை மீட்டெடுக்க இரண்டு மாதங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4