'ஜவான்' படத்தின் உலக அளவில் ரூ.600 கோடி வசூல்

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #Collection #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
'ஜவான்' படத்தின் உலக அளவில் ரூ.600 கோடி வசூல்

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. தற்போது அவர் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தை இயக்கியுள்ளார், இதில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜவான்' திரைப்படம் உலகளவில் செப்டம்பர் 7 ஆம் தேதி ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் செய்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி ஜவான் திரைப்படம் 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.621 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4