ஆன்மீக வழிபாடுகளில் கவனம் செலுத்தவேண்டிய இரு ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
ஆன்மீக வழிபாடுகளில் கவனம் செலுத்தவேண்டிய இரு ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்:

அசுவினி: முன்னோர் வழிபாடு நன்மை தரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பரணி: உங்கள் நீண்ட நாள் விருப்பம் இன்று நிறைவேறும். பெரியவர்கள் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். கார்த்திகை 1: அரசு வழி முயற்சியில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: செலவு அதிகரிக்கும். நண்பர்களை சந்தித்து புதிய முயற்சிக்கு திட்டமிடுவீர்கள். ரோகிணி: வருமானம் அதிகரிக்கும் என்றாலும் திடீர் செலவுகள் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். மிருகசீரிடம் 1,2: முன்னோரை வழிபட வளம் கூடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களது எதிர்பார்ப்புகள் எளிதாக பூர்த்தியாகும். புனர்பூசம் 1,2,3: உங்களை விட்டு விலகிச் சென்ற ஒருவர் மீண்டும் உங்களைத் தேடி வருவார். 

கடகம்

புனர்பூசம் 4: வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதிர்ஷ்டமான நாள். பூசம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். வழக்கில் வெற்றி உண்டாகும். ஆயில்யம்: நண்பர்கள் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். 

சிம்மம்

மகம்: இரண்டு நாட்களாக ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். முன்னோரை வழிபட மனக்கவலை விலகும். பூரம்: தடைபட்ட செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்திரம் 1: அரசு வழியில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். நெருக்கடி நீங்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் செயல்களில் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். அஸ்தம்: உங்கள் வேலைகளில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் இன்று தலையிட வேண்டாம். சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். கோயில் வழிபாடு நன்மை தரும். 

துலாம்

சித்திரை 3,4: அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி: குடும்பத்தில் உண்டான சங்கடங்கள் விலகும். உங்கள் செயல்கள் வெற்றியாகும். விசாகம் 1,2,3: இதுவரை இருந்த தடை விலகும். புதிய முயற்சியில் நண்பர்களுடன் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். 

விருச்சிகம்

விசாகம் 4: தடைகளை விலக்கி வைத்து புதிய பாதையில் பயணம் செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். எதிர்ப்புகள் விலகும். புதிய முயற்சிகள் நன்மையாகும். கேட்டை: மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். 

தனுசு

மூலம்: குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பூராடம்: முன்னோர் வழிபாட்டில் மனம் செல்லும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். நிதிநிலை உயரும். உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சியை இன்று அடைவீர்கள். சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். 

மகரம்

உத்திராடம் 2,3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். திருவோணம்: புதிய முயற்சி இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பில். தடையும் தாமதமும் உண்டாகும். அவிட்டம் 1,2: எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். பணியிடத்தில் மேலதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4: நீண்ட நாட்களாக முடிவிற்கு வராமல் இருந்த ஒரு பிரச்னை இன்று முடிவிற்கு வரும். சதயம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். பூரட்டாதி 1,2,3: நண்பர்கள் உதவியுடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவுகள் அதிகரிக்கும். 

மீனம்

பூரட்டாதி 4: எதிர்பார்த்த செய்தி வரும். பூர்வீக சொத்து குறித்து உறவினர்களுடன் பேசுவீர்கள். உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரேவதி: உங்கள் முயற்சிக்கேற்ற வருமானம் வரும். சிலர் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.