நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்!

#SriLanka #weather #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்!

நாட்டின் பெரும்பலான இடங்களில் பலத்த மழைவீழச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

இதன்படி  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில், ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றானது மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

மழை மற்றும் இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிரத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4