சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!

உலகின் மிகச் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. பயண இணையத்தளங்களில் ஒன்றான Big 7 Travel வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2023 ஆண்டிற்கான உலகின் தலைச்சிறந்த 50 தீவுகளில் இலங்கை 13 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இலங்கையின் தலைச்சிறந்த உணவு, விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சிறந்த தீவாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக Big 7 Travel வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலப்பகுதியில் நலிவடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

அத்துடன் பொருளாதார நெருக்கடியில் இருந்தும் இலங்கை மீண்டு வர சுற்றுலா பயணிகள் பெரும் பங்கு வகித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், இலங்கைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய கௌரவமானது அதிகளவிலான சுற்றுலாத்துறையினரை ஈர்க்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4