தயாசிறியை கட்சியை விட்டு விலக்குவதற்கு 50 இலட்சம் பந்தயம் கட்டிய அமைச்சர்!

#SriLanka #SLPP #Tamilnews #sri lanka tamil news #srilankan politics #Politician
Mayoorikka
2 years ago
தயாசிறியை கட்சியை விட்டு விலக்குவதற்கு 50 இலட்சம் பந்தயம் கட்டிய அமைச்சர்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை நீக்குவதாகக் கூறி கட்சியின் பொருளாளரான இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண 50 இலட்சம் ரூபாவை பந்தயம் கட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 இணைய ஊடகமொன்றின் விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட தயாசிறி ஜயசேகர அவர்களே இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

 கட்சியைக் கொடுத்து அரசாங்கத்திடம் இருந்து பதவிகளையும் வரங்களையும் பெற்றுக் கொண்ட ஒரு குழுவினர், கட்சிக்காரரைக் கூட சாதுரியமாகவும் சட்ட விரோதமாகவும் கட்சிக்குள் மீண்டும் பிரவேசித்து அவரை கட்சியில் இருந்து நீக்க சதி செய்ததாக தயாசிறி ஜயசேகர இங்கு குறிப்பிடுகின்றார்.

 முன்னாள் செயலாளர் நாயகம் இந்த கலந்துரையாடலில் சதியை மேற்கொண்டவர்கள் மற்றும் அது எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என வெளிப்படுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4