கிராமிய குழுக்களை வலுவூட்டும் பயிற்சி வகுப்பும், உற்பத்தி கண்காட்சியும் இன்று இடம்பெற்றது

#SriLanka #Kilinochchi #Event #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
கிராமிய குழுக்களை வலுவூட்டும் பயிற்சி வகுப்பும், உற்பத்தி கண்காட்சியும் இன்று இடம்பெற்றது

கிராமிய குழுக்களை வலுவூட்டும் பயிற்சி வகுப்பும், உற்பத்தி கண்காட்சியும் இன்று இடம்பெற்றது. வேர்ள்ட் விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

 கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 11 கிராம சேவையாளர் பிரிவில் உருவாக்கப்பட்ட 49 குழுக்களை ஒன்றிணைத்து குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

 இதன்போது குழு செயற்பாடுகளும், பயிற்சியும், சேமிப்பு தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன், உற்பத்திகளும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

 இதன் போது, சேமிப்பு மற்றும் குழு உற்பத்தி செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அன்பளிப்பும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 பொருளாதார தாக்கத்திலிருந்து விடுபடும் வகையில் கிராமிய குழுக்கள் ஊடாக உள்ளுர் உற்பத்தி மற்றும் சேமிப்பு தொடர்பில் குறித்த குழுக்கள் சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4