சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை பிடிக்கச் சென்ற போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை காணவில்லை

#SriLanka #Arrest #Police #Court Order #Kilinochchi #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
2 years ago
சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை பிடிக்கச் சென்ற போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை காணவில்லை

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை பிடிக்கச் சென்ற போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை காணவில்லை என தெரிவித்து தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

 கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள புதுஐயங்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்றைய தினம் 14.09.2023 அதிகாலை ஆறு முப்பது மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

 இதன்பொழுது அங்கு சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர். அவர்களை துரத்திச் சென்ற மூவரில் ஒருவரை காணவில்லை. 

 இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மோப்ப நாயின் உதவியுடன் அப்பகுதியில் தொடர்ந்தும் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4