தாய் வழி உறவால் பிரச்சனைகளை சந்திக்கும் ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
தாய் வழி உறவால் பிரச்சனைகளை சந்திக்கும் ரிஷப ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்களின் நீண்டநாள் முயற்சி ஒன்று வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பரணி: குடும்பத்தில் உண்டான பிரச்னைகள் விலகும். குழந்தைகளால் நன்மை அதிகரிக்கும். கார்த்திகை 1: வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட தொல்லை விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். ரோகிணி: வருவாயில் இருந்த தடை நீங்கும். வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையால் ஆதாயம் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: அரசு வழி முயற்சி ஆதாயமாகும். தடைகளை சரி செய்து வெற்றி அடைவீர்கள். திருவாதிரை: தொழிலில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். புனர்பூசம் 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புண்டாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். பூசம்: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள். வரவை வைத்து கடன்களை அடைப்பீர்கள். ஆயில்யம்: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்

சிம்மம்

மகம்: உங்கள் முயற்சி தள்ளிப் போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயலில் கவனம் தேவை. பூரம்: பணியிடத்தில் பல வழியிலும் நெருக்கடி உண்டாகும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். அடுத்தவர் பிரச்சினைகளில் இன்று தலையிட வேண்டாம்.

கன்னி

உத்திரம் 2,3,4: பணத் தட்டுப்பாட்டின் காரணமாக முயற்சிகள் இழுபறியாகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். அஸ்தம்: அலைச்சல் கூடும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை காண முடியாமல் போகும். சித்திரை 1,2: மதியம் வரை வியாபாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும். அதன்பின் நிலைமை சீராகும்.

துலாம்

சித்திரை 3,4: உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி: குரு பகவான் வக்கிரமடைந்து இருப்பதால் செயல்களில் கவனம் அவசியம். குடும்ப நலனில் அக்கறை தேவை. விசாகம் 1,2,3: புதிய வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும்.

விருச்சிகம்

விசாகம் 4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நேற்றைய முயற்சியில் இன்று ஆதாயம் காண்பீர்கள். அனுஷம்: தொழிலில் இருந்த சங்கடம் நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கேட்டை: எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும்.

தனுசு

மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். பூராடம்: பெரியோரின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உத்திராடம் 1: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். 

மகரம்

உத்திராடம் 2,3,4: நீண்ட நாள் பிரச்னைக்கு முடிவு ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த உதவி வந்து சேரும். திருவோணம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும். அவிட்டம் 1,2: அலைச்சல் கூடும். வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். பொறுமையாக இருங்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4: நீண்டநாள் பிரச்னை ஒன்று மீண்டும் தோன்றும். மனதில் இனம் புரியாத பயம் ஏற்படும். சதயம்: உழைப்பு அதிகரிக்கும். சில தடைகளை சந்தித்தாலும் உங்கள் திறமையால் எண்ணியதை அடைவீர்கள். பூரட்டாதி 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

மீனம்

பூரட்டாதி 4: உங்களுக்கு எதிராக செயல்பட்ட உறவினர்கள் மனம் மாறுவார்கள். வரவு அதிகரிக்கும். உத்திரட்டாதி: அலுவலகப் பணியில் சில சங்கடம் தோன்றும். பணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி இழுறியாகும். ரேவதி: உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். குடும்பத்தில் சில பிரச்னைகள் உண்டாகும்.