சிறுமியை கொலை செய்த பாட்டிக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

#SriLanka #Jaffna #Death #Court Order #Tamilnews #sri lanka tamil news #Girl
Mayoorikka
2 years ago
சிறுமியை கொலை செய்த பாட்டிக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது பாட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 திருநெல்வேலி பகுதியிலுள்ள விடுதி ஒன்றிலிருந்து 12 வயதான சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரது பாட்டி மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 இந்தநிலையில், உடல்நிலையில் முன்னேற்றமடைந்த குறித்த பாட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டார். இதன்படி, சிறுமியை தாமே கொலை செய்து விட்டு தமது உயிரையும் மாய்த்து கொள்வதற்கு முயற்சித்தாக முன்னாள் தாதியரான குறித்த பாட்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்து வாழ்கின்ற போதிலும் சிறுமி தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

 இந்தநிலையில், தமக்கு பின்னர் சிறுமியின் நிலைமை குறித்து ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து அவரை கொலை செய்து விட்டு தாமும் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்ததாக சிறுமியின் பாட்டி தெரிவித்துள்ளார்.

 பின்னர் அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4