நாட்டை விட்டு வெளியேறிய 600 மருத்துவர்கள் நாடு திரும்ப தயார்: அமைச்சரின் அறிவிப்பு

#SriLanka #Sri Lanka President #Health #doctor #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
நாட்டை விட்டு வெளியேறிய 600 மருத்துவர்கள் நாடு திரும்ப  தயார்: அமைச்சரின் அறிவிப்பு

சுகாதாரத்துறையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையால் மருத்துவ சேவையில் பயிற்சி பெற்று வெளிநாட்டில் இருக்கும் வைத்தியர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து பணிபுரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

 சுகாதார சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போதுள்ள திட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அதன்படி, தற்போது மருத்துவ சேவையில் பயிற்சி பெற்று வெளிநாடுகளில் உள்ள 600 வைத்தியர்கள் எதிர்வரும் 02 மாதங்களுக்குள் இலங்கைக்கு திரும்புவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

 அவர்கள் மீண்டும் வைத்தியசாலை சேவையில் இணைந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 இதேவேளை, ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் பணியமர்த்தும் தீர்மானம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய தெரிவிக்கையில், , 63 வயதில் ஓய்வுபெறும் வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களுக்கே இந்த வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார். 

அவ்வாறான வைத்தியர்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைக்கு அமைய ஓய்வு பெறலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அப்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 02 வருட காலத்திற்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

 இதேவேளை, ஓய்வுபெற்ற வைத்தியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டால், நடைமுறையை பின்பற்றுவது மிகவும் அவசியமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்களை சேவைக்கு அமர்த்துவது தொடர்பில் சுகாதார அமைச்சும் நிறுவன சட்டவிதிகளின் பிரகாரம் செயற்படுவதில் அக்கறை செலுத்த வேண்டுமென அதன் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்திட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4