மழையால் மீண்டும் டெங்கு அதிகரிப்பு: 15 நாட்களில் 1000 டெங்கு நோயாளர்கள்

#SriLanka #Fever #Dengue
Prathees
2 years ago
மழையால் மீண்டும் டெங்கு அதிகரிப்பு: 15 நாட்களில் 1000 டெங்கு நோயாளர்கள்

இம்மாதத்தின் கடந்த சில நாட்களில் இலங்கையில் 1000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 தற்போது நாளாந்தம் 100 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

 நாட்டில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.

 டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி இவ்வருடம் இதுவரையில் 63000 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4