பெரஹரவிற்கு கொண்டு வரப்பட்ட யானையை பார்க்க சென்ற மாணவன் பலி

#SriLanka #Death #Student #Attack #Elephant
Prathees
2 years ago
பெரஹரவிற்கு கொண்டு வரப்பட்ட யானையை பார்க்க சென்ற மாணவன் பலி

காவந்திஸ்ஸ ரஜமஹா விகாரைக்கு வருடாந்த ஊர்வலத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டு ஆலயத்தில் கட்டி வைக்கப்பட்ட யானை தாக்கி மிதித்ததில் 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அம்பிலிபிட்டிய கல் அமுன பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இன்று மதியம் யானை கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற மாணவன் யாரிடமும் கூறாமல் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 யானை மிதித்ததில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவனை, ஆலய உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 தாக்குதலில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, சம்பவம் இடம்பெற்ற போது யானை பாகன் அங்கு இருக்கவில்லை எனவும் அந்த அலட்சியத்தால் மாணவன் யானையிடம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ளார்.

 புரிதல் இல்லாததால், இதுபோன்ற விஷயங்களில் குழந்தைகள் அதிக அளவில் நேசிப்பதால், குழந்தைகள் ஆபத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

 உரிய பாதுகாப்பு வழங்காத யானைghfd; குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார். சம்பவம் தொடர்பில் யானைக்கு பொறுப்பான யானைப் பாகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சம்பவம் தொடர்பில் பகாமுற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4