சட்டமா அதிபருக்கு தெரிவிக்காமல் ஹரக் கட்டாவை வெளியே எடுக்காதீர்கள்: மேல்முறையீட்டு நீதிமன்றம் CID க்கு உத்தரவு

#SriLanka #Colombo #Police #Court Order
Prathees
2 years ago
சட்டமா அதிபருக்கு தெரிவிக்காமல் ஹரக் கட்டாவை வெளியே எடுக்காதீர்கள்: மேல்முறையீட்டு நீதிமன்றம் CID க்கு உத்தரவு

ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தகவை தனது நீதிமன்றத்துக்கும், கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் அறிவிக்காமல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து அவரை வெளியே அழைத்துச் செல்லவோ அல்லது அவரது தடுப்புக்காவல் இடத்தை மாற்றவோ கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது.

 குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 தம்மை வெளியே அழைத்துச் சென்று கொல்ல முயற்சி நடப்பதாகவும்இ எனவே தம்மை வெளியே அழைத்துச் செல்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் கோரிய நந்துன் சிந்தக விக்கிரமரத்ன தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர், நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர்,பொலிஸ் மா அதிபர்,குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இந்த உத்தரவை அமுல்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

 அந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 25ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4