நல்லூர் தேர்த் திருவிழாவில் யாசகம் பெற பெற்றோர்களுடன் வந்த குழந்தை மாயம்!

#SriLanka #Nallur #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
நல்லூர் தேர்த்  திருவிழாவில் யாசகம் பெற பெற்றோர்களுடன் வந்த குழந்தை மாயம்!


நல்லூர் தேர்த் திருவிழாவில்  யாசகம் பெற பெற்றோர்களுடன் வந்த பெண் குழந்தையை காணவில்லை என யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இருந்து யாசகம் பெற பெற்றோருடன் வருகை தந்த குழந்தையே இவ்வாறு காணாமல்போயுள்ளது.

அவர்கள் தேர் மற்றும் தீர்த்த திருவிழாவின் போது நல்லூரில் யாசகம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போதே இரண்டரை வயதுள்ள பெண் குழந்தை காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4